Vaazhai - 100% Honest Review | Kalaiyarasan | Nikhila Vimal | Santhosh Narayanan | Mari Selvaraj

preview_player
Показать описание
Rajalakshmi Eduverse:
Contact : 9176827682

Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
We also provide our learners with a 100% Placement assistance throughout.

Vaazhai - 100% Honest Review | Kalaiyarasan | Nikhila Vimal | Santhosh Narayanan | Mari Selvaraj | Karthick MaayaKumar |
#Vaazhai #Review #Promotion

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks

Follow Karthick MaayaKumar:
@ karthick_maayakumar

SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:

உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!

கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!

This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....

Thanks For Choosing Our Videos...!!!
Рекомендации по теме
Комментарии
Автор

Rajalakshmi Eduverse:
Contact : 9176827682

Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
We also provide our learners with a 100% Placement assistance throughout.
For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net

MaayaM_Studios
Автор

இந்த படைப்பு என்னைய அழுகையை வர வச்சிருச்சி என் வழக்கையில் உண்மையா மறக்க மாட்டேன் 😢🎉❤️💐🙏🏽🙏🏽🙏🏽வாழ்த்துக்கள் மாரி அண்ணா அனைவருக்கும் 🙏🏽❤️😭😭😭😭😭😭😢🎉

micgiri
Автор

மாரிசெல்வராஜ் வாழை மற்றொரு படைப்பு பல விருதுகள் கிடைக்கும் இசை சந்தோஷ் நாராயணன் க்ளைமாக்ஸ் காட்சி இசை வேற ரகம் எமோஷனல் காட்சி தருகிறார் ❤❤❤

Saravanavelu
Автор

படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

balajis
Автор

மாரிசெல்வராஜ் வாழை என்னுடைய பாராட்டு தளபதி ரசிகன் நான் 10/10 rating ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐✋🎬🎬🎬🎬🎬🎬

Saravanavelu
Автор

நானும் சிறு வயதில் வாழை சுமந்து உள்ளேன். தற்போது இயற்பியல் முதுகலை ஆசிரியர். சிறுவயது நினைவுகள் இன்றும் என் மனதில் புதைந்துள்ளது.

kdharmarajan
Автор

இந்த வாரத்தில் தரமான படம் மாரிசெல்வராஜ் வாழை தான் உண்மை கதை வாழ்க்கை வரலாறு படம் ஒரு அற்புதமான படைப்பு மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤

Saravanavelu
Автор

இதற்கு முன் நான் குடும்பத்துடன் அறம் படம் பார்த்தேன் அதன் பிறகு பெரிய ஈர்ப்பு இல்லை சண்டை வன்முறை அரைகுறை ஆடையுடன் ஆடும் மகளிர் என்று இவற்றில் கொஞ்சம் கூடுதலாகவோ அல்லது எல்லாம் கலந்தோ வந்து இருக்கு பெண் குழந்தைகளை திறையரங்கம் பக்கம் கூப்பிட்டு போகவே பயமா இருக்கு ஆனா இந்த ஞாயிற்று கிழமை வாழை படத்திற்கு செல்லலாம் என்று நினைக்கிறன் எங்கள் மதுரையில் அண்ணாமலை திறையரங்கம் தான் சிறந்தது ஏன் என்றால் அங்கே வெளியில் இருந்து கொண்டுவரும் உணவுகளை சாப்பிட்டுக்கொள்ள அனுமதிப்பார்கள் நமக்கும் பட்ஜெட் பெரிய சுமையாய் தெரியாது நீங்களும் மதுரைக்கு வந்தால் சிம்மக்கல் பகுதியில் உள்ள தியேட்டர் முயற்சி செய்து பாருங்க எங்கள மாதிரி ஏழை பாலை களுக்கு இது வரம் ❤❤❤❤❤❤❤❤❤❤

chakrachakra
Автор

உங்களின் திரை விமர்சனம் பார்க்கு போது சிறந்த திரை விமர்சகர் என்பதை ஒவ்வொரு திரைப்படம் வாயிலாக பிரதிபலித்தது கொண்டே போகிறது Excellent 👌. என்றும் என்றென்றும் கரம் கூப்பி வணங்குகிறேன் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசிரியர் தொகுப்பாளர் திரு கார்த்திக் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉💐💐💐👍👍💯 சதவீதம் உண்மை 👏👏👏👏👏👏👏👏👏👏👏

VijayaLakshmi-pmjt
Автор

மாரி செல்வராஜ் நல்ல புள்ளையா யார்மனதையும் காயபடுத்தாமல் வன்மம் இல்லாமல் உணர வைத்த விதம் அருமை வாழ்த்துக்கள்
நல்ல படைப்புக்கு தலை வணங்குகிறேன்

veluvelu-gz
Автор

ரொம்ப நேரம் காக்க வைத்து விட்டீர்கள் சகோதரா...❤❤ மகிழ்ச்சி மற்றும் நன்றி பல❤

ashoksamurai
Автор

✍️வாழை👍
விதை வேண்டாம் வெட்டி நட்டு பார்!தழைத்து வளரந் திடுவேன் பூத்து கனிந்திடுவேன்!உன் வீட்டு விருந்துக்கு சாப்பிடும் இலையாவேன்! உணவுக்கு நல்ல மருந்தாவேன்!வாழ் விர்க்கும் சாவுக்கும் முற்றத்தில் நான் தான் முதலாவேன்!அதனால் தான் என்னவோ வாசலில் கட்டி அழகு பார்த்த என்னை வெட்டி வீசிகின்றனர் வீதியில்!அப்போது கூட நான் கலங்குவது இல்லை வீசிய இடத்தில் தழைத்து வளர்ந்திடுவேன்!எத்தனை முறை என்னை வெட்டி வீழ்த்தினாலும்!நான் தான் உன் வீட்டில் முதலாவேன்!ஆம் யாருக்கும் பிழை ஏதும் செய்யாமல் தழைத்து வளர்ந்து! பலரை வாழ வைப்பதால் தான் என்னவோ என்னை மனிதன் வாழை என பெயர் வைத்து அழைக்கின்றனர்!🙏

tamilkavi
Автор

வாழை திரைப்படத்தில் லாரி விபத்து காட்சிகள் அனைவரையும் கலங்கடிக்கிறது - அது, தென் மாவட்டங்களை துயரில் ஆழ்த்திய புளியங்குளம் வாழைத்தார் லாரி கவிழ்ந்த விபத்து.!

1999 பிப்ரவரி 22 அன்று ஸ்ரீவைகுண்டம் பேட்மாநகர் அருகே அந்த கோரவிபத்து நடந்தது. வாழைத்தார் லாரியின் மீது அமர்ந்திருந்த புளியங்குளம் தொழிலாளர்கள் 19 பேர் லாரி கவிழ்ந்ததால் அகால மரணமடைந்தார்கள்.

அப்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் சென்னையில் சட்டமன்றக் கூட்டத்தில் இருந்தார். சேதி கேள்விப்பட்டதும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடுத்தடுத்த நடவடிக்கையில் களமிறங்கினார்.

சம்பவம் நடந்த மறுநாளே 1999 பிப்ரவரி 23 அன்று சட்டமன்றத்தில் புளியங்குளம் லாரி விபத்தை சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானமாக கொண்டு வந்தார். பேரவைத் தலைவராக பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், முதலமைச்சராக மு.கருணாநிதி இருந்தார். வாழைத்தார் ஏற்றிச் சென்ற தொழிலாளர்களின் துயர நிலையை சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் மூலமாக உலகறியச் செய்தார் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.
சட்டப்பேரவையில் வாதங்கள், விவாதங்கள் கடுமையாக நடைபெற்றன. டாக்டர் வெளிநடப்பு செய்தார். செய்தியாளர்களிடம் துயரநிகழ்வை எடுத்துரைத்தார்.

அடுத்த நாள் உயிரிழந்த மக்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணம் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார் முதலமைச்சர் மு.கருணாநிதி
அப்போது புளியங்குளம் சாத்தான்குளம் தொகுதிக்கு உட்பட்டது என்பதால் அந்த ஊரின் எம்.எல்.ஏ. மணி நாடார் மூலமாக நிவாரண உதவிகளை வழங்கியது அரசு.

சென்னையில் இருந்து விரைந்து வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் காயமடைந்த மக்களை பாளையங்கோட்டை மருத்துவமனையிலும், பாதிக்கப்பட்ட மக்களை புளியங்குளத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தென் மாவட்டத்தில் உள்ள எளிய மக்களின் காயங்களை மாரி மாரி திரைக்காவியங்களாக காட்டினாலும் அன்று அந்த மக்களின் காயங்களுக்கு மருந்து போட்டது மருத்துவர் கிருஷ்ணசாமி ஐயா அவர்களின் வரலாறாக இருந்து கொண்டே இருக்கிறது.!

balasenthilen
Автор

அருமை படம் ❤❤❤ இந்தத் திரைப்படத்தில் அனைத்து காட்சிகளும் அழகாகவும் நேர்த்தியாக உள்ளது

rishi
Автор

அண்ணன் மாரி செல்வராஜின் வாழை🎉🎉🎉 தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பு ❤❤❤❤
அண்ணன் மாரியின் வாழை வாழையடி வாழையாக பல ஆண்டுகள் பேசும் படம் 😊❤❤❤❤

Maruthanaayagam
Автор

25 வருடத்துக்குமுன்னாடி சனிகிழமை 10/30மணிக்கு அந்த விபத்தை பார்த்தவன் அந்தஅலறல் சத்தம் இன்னும் கேட்டுகிட்டுயே இருக்கிறது என் ஊர் பேட்மாநகரம்

Shathik-pk
Автор

இத்திரைப்படத்தை உடனே பார்க்க தூண்டுகிறது

rajendranrajendran
Автор

எங்க ஊர்லயும் இந்த மாதிரி சம்பவம் நடந்து வேலைக்குப் போனவர்கள் வாழைத்தாரை லோடு ஏத்தி மேலே உட்கார்ந்து வந்து வாழைத்தார் 20க்கும் மேற்பட்ட இருந்தார்கள்

Mr.KaliMrs.Thavam
Автор

அண்ணா நல்லது சொன்னதுக்கு நல்லதை பேசியதற்கு நன்றி நன்றி

SakthiVel-nihw
Автор

இந்தப் படத்தில் எட்டுப்பட்டி ராசா இருந்து ஒரு பாட்டு வரும் செம பாட்டு இந்த படத்தின் காட்சிக்கும் அந்த பாட்டுக்கும் செமையா இருக்கும்

t.senthilkumar