JAMA Review - Tamil Talkies

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

இந்த வாரத்தில் வெளிவந்த படங்களில் பாரி இளவழகன் நடித்து இயக்கிய ஜமா அருமையான படம் இதுதான் உண்மை வெற்றி பெற வாழ்த்துக்கள்

Saravanavelu
Автор

நல்லபடத்தை பாராட்டி பேசும் போது ப்ளூசட்டையின் நேர்மை தெரிகிறது

anandanthiru
Автор

நீண்ட இடைவெளிக்கு பிறகு நேர்மறை படம்.்..அற்புதமான

jamalvoice-qe
Автор

இரண்டாம் பாதி முழுவதுமே தெருக்கூத்து நாடகம் தான் படமே....குந்தி வேஷத்தில் ஹீரோ நடிப்பதை பார்த்து வில்லன் மனம் மாறுவது அருமையாக இருந்தது ❤❤❤❤

santhoshp
Автор

படத்தில் கதாநாயகன் தனது கூத்து வாத்தியார் சேத்தனிடம் அர்ஜுன் வேடம் கேட்க, அவர் வேண்டுமென்றே ஒன்றுக்கும் உதவாத குந்தி வேடத்தை கொடுத்து விடுகிறார் .

ஆனால் அந்த குந்தி வேடத்தை அணிந்து கர்ணனாக இறந்து கிடக்கும் சேத்தனை பார்த்து ஆறு நிமிடங்கள் வசனம் பேசி அழுகிற அந்தக் காட்சியில் கதாநாயகன் தற்போது இருக்கும் அனைத்து முன்னணி கதாநாயகர்களையும் மிரள வைத்துவிட்டார்.

 ஒரு கட்டத்தில் கர்ணனாக இருக்கும் சேத்தன் வாத்தியாரே கண்ணைத் திறந்து அவனது அழுகையும், உணர்ச்சி மிக்க நடிப்பையும் பார்த்து வெளிறிப் போய் திகைத்து, அவனது கால்களில் விழுந்து தன் கலையும், ஆணவத்தையும்  சமர்பித்து உயிரை விடுவது  உலகின் ஆகச் சிறந்த கவிதை புத்தகத்தில் கூட காண முடியாத காட்சி.

 உண்மையிலேயே மகாபாரதத்தில் கூட குந்தி தேவை இப்படி அழுது இருப்பாள்? என நம்மால் கணித்திருக்க முடியாது.

 படம் முழுக்க தனது பெண் தன்மையான இயல்பான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போடும் கதாநாயகன் இறுதியில் அர்ஜுன் வேடமிட்டு, பல  நிமிடங்கள் சுழன்று சுழன்று ஆடி  பறந்து தொப்பென தரையில் சப்பனமிட்டு அசையாமல் மூச்சிரைக்க உட்காரும்போது படம் முடிகிறது.

 படம் முடிந்துவிட்ட உணர்வு கூட இல்லாமல் ரசிகர்கள் திகைத்துப் போய் பலரும் திரையை வெறித்துப் பார்க்கிறார்கள்.

 உலக சினிமா, உலக சினிமா என்கிறார்கள்.  உலகம் முழுமைக்கான ஒரு சினிமா கண்டிப்பாக உலக சினிமா ஆக இருக்க முடியாது. அப்படி வெளியானால் அது கமர்சியல் மசாலா படமாக தான் இருக்க முடியும்.

 ஒரு மண்ணின், ஒரு பாரம்பரியத்தின் தன்மையை சீர் குலைக்காமல் வெளிவரும் உன்னதமான படைப்பு தான் உலக சினிமா என்றால் ஜமா தான் உலக சினிமா.

 கிளைமாக்ஸ் காட்சியில்   இயக்குனர் நினைத்திருந்தால்,   அவர் அர்ஜுனன் வேடமிட்டு பாடல் பாடி ஆட,   புயல் மழை வர,   18 பட்டி கிராமங்களும் சூழ்ந்து பார்க்க, தொலைக்காட்சி கேமராக்கள் வந்து குவிய அவர் ஒரு மாபெரும் சாதனையாளர் ஆகிவிட்டார் என கதாநாயகனின் வெற்றியை காட்டி இருக்கலாம்.

 அப்படி காட்டி இருந்தால் அது வழக்கமான மசாலா சினிமாவாக ஆகி இருக்கும்.

 ஆனால் ஆளே இல்லாத அந்த பொட்டல் வெளியில் வெறும் ஆறு ஏழு பேர் இருக்கும் தன் குழுவினர் முன்னிலையில்,  
அர்ஜுனன் வேஷம் கட்டி ஆடி, யாரெல்லாம் கேலி பேசினார்களோ அவர்கள் முன்னே தான் ஒரு ஆகச் சிறந்த கூத்து கலைஞன் என தனது கதாபாத்திரத்தின் நியாயத்தை நிறுவும் போது  சாதாரண சினிமா உலக சினிமா ஆக மாறுகிறது.

இந்தப் படத்தின் இன்னொரு கதாநாயகன் இளையராஜா.

 படம் பார்க்கையில் நமது கவனம் திசை திரும்பும் போதெல்லாம் தனது பின்னணி இசை மூலமாக நம் கரம் பிடித்து திரைப்படத்திற்குள் கொண்டு வரக்கூடிய அருவமாக அவரின் பின்னணி இசை ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

 குறிப்பாக அந்த மொட்டை பாறை மீது கதாநாயகனுக்கு சாமி இறங்கும் காட்சியில் துவங்கி, கிளைமாக்ஸ் வரை இளையராஜா தனி ராஜாங்கமே நடத்தி இருக்கிறார் .

இந்த படத்திற்கு எல்லாம் அவர் சம்பளம் பெற்றாரா? இல்லையா? என்று கூட தெரியவில்லை . ஆனால் அவர் நமது அனைவருக்குமே போனஸ் அளித்திருக்கிறார்.

யோசித்துப் பாருங்கள். மகளின் மரணம், மனைவியின் மரணம் இதை தாண்டி ஒரு இசைக் கலைஞன் தன்னுடைய உன்னதமான இசையை ஆகச் சிறந்த ஒரு உலக மொழி திரைப்படத்திற்கு தந்தருளுகிறார் என்றால் இசையின் வேர் அவர் மனதில், மூளையில் எத்தனை ஆழமாக வேரூன்றி இருக்கிறது பாருங்கள்.

அவதாரம், காவியத் தலைவன் போன்ற படங்களை எடுத்த இயக்குனர்களும், இந்தியன், ஜெயிலர், விக்ரம் போன்ற படங்களை எடுத்த இயக்குனர்களும் பார்த்து வெட்கி மிரள வேண்டிய படைப்பு இது.

 சேத்தன் வாத்தியாரையும், அந்த கதாநாயக இயக்குனரையும் எங்காவது காண நேர்ந்தால் அவர்களது கைகளைப் பிடித்து குலுக்கி வாழ்த்து தெரிவியுங்கள். மனம் திறந்து பாராட்டுங்கள்.

 அப்போதுதான் ஜமா போன்ற மண்மொழி பேசும் படங்களை எடுக்க இயக்குனர்கள் துணிந்து முன் வருவார்கள்.

 இல்லையென்றால் ராயன்கள் தான் நம்மைச் சுற்றி கத்தியை நீட்டிக்கொண்டு குரூரமாக முற்றுகை இடுவார்கள் .

பா.சுப்ரமண்யம்.

globedesignschennai
Автор

review போடத்துக்கு நன்றி ப்ளூ சட்டை. இது மாதிரி சின்ன படங்களுக்கு review போடுங்க

Mr.PanneerSelva_M
Автор

Dont miss to support these kind of films, if we don't support these kind of real cinema we'll regret later

K.Punniyakotti
Автор

இந்த சிறிய பட்ஜெட் படத்தை காப்பாத்திட்டீங்க ❤❤❤❤ 👏 👏 🙏

Murugadhoos
Автор

Good review, Ilayaraja music superb, 50 years nearing still Ilayaraja rocking.... congratulations for the Director and utharavadham, sema punch 👍

gorillagiri
Автор

என்னவென்றாலும் இப்படியான படத்தை வெற்றி பெற வைப்பது தமிழ்சினிமாவுக்கு நன்மை.

SSSS-hl
Автор

கூழாங்கல் 1st film
ஜமா 2nd film

Different ya than iruku👏🏻

kalamsachin
Автор

ரஜினி அஜீத் தயே. தூக்கி எறிந்து பேசும் நீங்கள் இவ்வளவு மரியாதையுடன் கருத்து சொன்னது சூப்பர் சார்

Abcdefgh
Автор

VOTE.. படம் நல்லா இருக்கா இல்லையா? நல்லா இருக்கு = 👍 நல்லா இல்லை = 👎

sivasakthisaravanan
Автор

நன்றி மாறன் சார்.. உண்மையான விமர்சனத்துக்கு..

aalde
Автор

புளு சட்டை மாமா
சார்பாக ஜமா
வெற்றி பெற வாழ்த்துகள் 🎉🎉

Polarstar
Автор

யாரெல்லாம் கங்குவாவும் முரட்டு அடி வாங்கும் என்று நினைக்கிறீர்கள்

PCOPLOGANATHAN
Автор

உயிரைக் கொடுத்து நடித்து இயக்கிய தம்பிக்கு வாழ்த்துக்கள்

sivaprakash
Автор

உசுருக்கு உத்தரவாதம் எல்லா படமும் பாத்துட்டிங்களா😲😲😲

Gunasekar
Автор

ஜமா நல்ல படத்திற்கு மரியாதை தந்த திரு மாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤

balurathnasamy
Автор

It's awesome the music vara the middle age only we feel the taste of real music. 🎉🎉 raja raja thaan...

paulpandi