VAAZHAI review by prashanth

preview_player
Показать описание

SIVAKASI CRACKERS 💯 QUALITY
65% Mega Discount For Diwali 🎇
USE COUPON CODE ( Cinema) : 500 INSTANT DISCOUNT 💥
FIRST 100 CUSTOMERS 500 INSTANT DISCOUNT 🎇
BUY UPTO 10000 AND GET 1000 EXTRA INSTANT DISCOUNT🔥

CONTACT - 8667585292

Review about recently released tamil movie vaazhai!
Рекомендации по теме
Комментарии
Автор

இதுவரை நான் பார்த்த சினிமா விமர்சனத்தில் மிகவும் உண்மையை உடைத்த இந்தப் பதிவிற்கு அண்ணன் பிரசாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்..❤❤

pavinkumar
Автор

பிரசாந்த், இந்தப் படத்திற்கு இதைவிட மனச தொடுற மாதிரி ஒரு விமர்சனம் அமையாது❤❤❤❤🙏🙏🙏 இதிலேயே கலங்க வச்சுட்டீங்க🥹🥹🙂 "எப்படி நிக்கிறேன் பாக்குறீங்க இல்ல, இவ்வளவு தாங்க படம்" ...நெஞ்சத்தை கிள்ளிடீங்க போங்க😀🙂❤️

christythambi
Автор

மிகவும் எளிமையான முறையில் நேர்த்தியாக விமர்சகர் பாராட்டுக்கள்...

chinnarasuv
Автор

இவ்வளவு அழகான விமர்சனம் சமீபத்தில் கேட்டது இல்லை...

nagrec
Автор

நான் பார்த்த ரிவிவ் மிக மிக நேர்த்தி யதார்த்தம் உண்மை உடைத்த அண்ணா பிரசாந்த் உங்களுக்கு கோடி வணக்கம் 🙏🙏🙏🙏

stalinraj
Автор

ஆஸ்கார் என்பது ஒரு மாயை.

நாம் கொடுப்பது தான் ஆஸ்கார்.
அங்கீகாரம் நண்பர்களே.

சில நேரங்களில் மகிழ்ச்சி, சிரிப்பு.
இறுதியில் கணம், மனம் கணத்தது.

வாழ்வின் வலி.
அந்த இள வயது காட்சிகள் என்னைப் பார்த்து போலே இருந்தது

Manikandan.
Автор

Vaazhai is an Extraordinary Movie
Mari Selvaraj is Oscar Worthy Director
Terrific performance from those Two Boys
Excellent BGM & Music by SaNa
Cinematography & Sound Design is Too Good
Don't Miss at any cost in Theatre
Vaazhai is very Lively
After Movie got over Audience didn't getup from their Seats
One of a Lifetime Experience

rockymanx
Автор

Booked evening show after your review bro…❤️❤️

syedijas
Автор

இந்த படம் ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டிய படம் 👍👍👍

stalinraj
Автор

மிட்நைட் பிரியாணி, பீட்சா, பர்கர், நூடுல்ஸ் என்று அலையும் ஒவ்வொருவரும், தங்கள் குழந்தைகளுடன் அவசியம் பார்க்க வேண்டிய காவியம்… ஒரு வாய் சோற்றுக்காக எவ்வளவு வேதனை என்பதை மிகவும் நேர்த்தியாக மாரி செல்வராஜ் படமாக்கியுள்ளார்…
ஆகாஸதூது என்ற மலயாள படத்தைதான் நான் இந்தாள் வரைக்கும், கல்நெஞ்சக்காரனையும் கரைக்கும் படமென்று நினைத்திருந்தேன்…

ஆனால், இன்று அம்பத்தூர் சினி ராக்கியில் இந்த காலத்தால் அழியாத காவியத்தை பார்த்தபின், வாழை தான் உணர்வுகளின் உன்னத படைப்பு என்று உறுதியாக நம்புகிறேன்… குடும்பத்துடன் (குறிப்பாக குழந்தைகளுடன்) தியேட்டரில் சென்று பார்க்க தகுதியுள்ள படம்!!

PMJoseub
Автор

வாழை :

வாழை திரைப்படத்தை நேற்று இரவு பார்த்தேன்.மிக நீண்ட படம் போல...
திரையில் ஓடியது என்னமோ இரண்டு மணி நேரம் 14 நிமிடங்கள் (2hrs 14 mins).

ஆனால் மனத்திரையில் இன்னமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வை (தங்களின் எதிர்காலத்திற்காக அல்லாமல்) நகர்த்த கூலி ஆட்களாய் அருகில் உள்ள கிராமத்தில் வாழைத் தோட்டத்தில் வாழைத்தாறுகளை சுமந்து சென்று லாரியில் ஏற்றி அதில் வரும் சொற்ப காசுகளை வைத்து குடும்பம் நடத்துகின்றனர்.

அதில் ஒரு புரட்சியாளன் (உரிமைக்காக குரல் கொடுப்பவன்) கூலிக்காக ஒரு ரூபாயை ஏற்றி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அதை தன்னுடைய மக்களுக்காக பெற்றுத் தருகிறான்.

பாட்டாளி வர்க்கத்தின் உரிமைக்கு குரல் கொடுக்கும் புரட்சியாளன் கைகளில் சிவப்பு துணியை ஏந்தி தான் ஆக வேண்டும் அல்லாமல் அதற்கு மாறாக தன் காதலி கொடுத்த மருதாணியினால் சிவந்த கைகளாக கூட இருக்கலாம் என்பது இந்த படம் உணர்த்துகிறது.

கூலியை ஒரு ரூபாய் அதிகம் கேட்டதற்காக அதற்குப் பழி வாங்கும் விதமாக அந்த வியாபாரி எடுத்த அற்பத்தனமான முடிவு அந்த கிராமத்தையே ஒரு சோகத்தில் மூழ்கடிக்கும் என்பது அவன் பின்னர் அறியும்போது அவனுக்குள் ஓரமாய் ஒட்டிக் கொண்டிருந்த மனித நேயம் இந்தியன் படத்தில் சந்துரு என்ற கதாபாத்திரத்தை நினைவுபடுத்துகிறது.

இந்த வட்டத்திற்குள் சிக்காமல் எட்டாம் வகுப்பு படிக்கும் "சிவநைந்தன்" என்ற பள்ளி மாணவன் ஒருவன் தவிர்க்க முடியாத சில நேரங்களில் வாழைத்தாரை சுமந்து செல்வதும்; தவிர்க்க முடிந்த நேரங்களில் பள்ளிக்கு செல்வதை உறுதியாக இருந்தான்.

அதில் சில உணர்வுபூர்வமான காரணங்கள் இருந்தாலும் அது மட்டும் தான் காரணம் என்று எண்ண முடியாத அளவில் அவன் படிப்பிலும் சிறந்து விளங்கினான் என்பதே உண்மை.

தன்னுடைய உள்ளுணர்வையும் அதனை இயக்கிய குடுகுடுப்பைக்காரனின் குடுகுடுப்பும் மற்றும் தன்னுடைய பள்ளி ஆசிரியை ஆன பூங்கொடியின் மீது கொண்ட நேசத்தினை மதித்து அதை நோக்கி அவன் சென்றதனால் அவன் பிழைத்துக் கொண்டான் என்பது நாம் படத்தில் காணும் உண்மை.

கடும் பசியே ஒரு சோகம் ; அதிலும் கடும் பசியில் சோகத்தை எதிர் நோக்குவது என்பது சோகத்திலும் சோகம். இப்படி அடுத்தடுத்த சோகங்களை அவனை துரத்த அதிலிருந்து மீள விவேகம் இழந்து ஓடி ஒரு இடத்தில் தடுக்கி விழுகின்றான்.

ஆம்

வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழை மரத்தை கட்டுகிறார்கள்.

ஆனால் இங்கோ

இனி நாம் பிழைப்பதற்கு வாழை நிச்சயம் வழி வகுக்காது என்று எண்ணி வேறு திசையில் தான் நம் வாழ்க்கை நகர்த்த வேண்டும் எண்ணம் அவனுக்கு அந்த நேரத்தில் தரிசனமாய் தோன்றியிருக்கக்கூடும்.

படத்தில் உள்ள சின்ன சின்ன காட்சிகளை நாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது சின்ன சின்ன உயிரினங்களும் திரையில் அவர்கள் வாழும் வாழ்க்கையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதையும் நாம் காண முடிகிறது .

இதனாலேயே என்னமோ தெரியவில்லை சிவனைந்தன் வீட்டில் வளர்த்த மாடு ஒரு காட்சியில் தங்களுக்கு துரோகம் இழைத்த இடைத்தரகர் வாழைத் தோட்டத்தில் இறங்கி தன் வேலையை காட்டி இருக்கும்.

கடைசியாக..

"பஞ்சு மிட்டாய் சேலை கட்டி" என்ற பாடல்

நெப்போலியன் ஊர்வசி மற்றும் குஷ்புவை மறக்கடிக்க செய்து

பின்பு விஷாலையும் S J சூர்யா நடித்த மார்க் அந்தோணி வையும் நினைவுபடுத்தி அழுத்தமாக பதிய வைத்திருந்தது....

தற்போது இரண்டு படத்தையும் தூக்கிப் போடும் வகையில்

"பஞ்சு மிட்டாய் சேலை கட்டி" என்ற பாடலை கேட்டால் பள்ளியில் ஆண்டு விழாவிற்கு நடன பயிற்சி கற்றுக் கொடுக்கும் ஆசிரியரான "நிகிலா விமலை" நிச்சயம் நினைவுபடுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை.

முடிவாக படத்தில் ஒரு காட்சியில் மலையாளத்து நடிகை நிகிலா விமல் "குடிமையியல்' என்ற ஒரு வார்த்தையை வகுப்பறையில் உள்ள கரும்பலையில் அவரே எழுதினார் என்று சிலர் பிரமித்து போய் பேசுகின்றனர்

ஆனால் உண்மையில் கவனிக்க வேண்டியது "வாழை மூலமாக இந்த மக்களின் வாழ்வியலை" அவ்வளவு அழகாக எடுத்த மாரிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

✍️✍️✍️சுரேஷ்

drsureshmohangemhospital
Автор

ஆக சிறந்த விமர்சனம் 👏👏👏
வார்த்தைகள் வர முடியுமால் தங்களின் தொண்டை அடைத்து கொள்வது உணர முடிகிறது.
மனம் நெகிழ்கறது. 🫂

arunjunai
Автор

இந்த படத்துக்கு கொடுக்கலேன்னா National Award ஒரு Scam... Best comment.

babujanardhanan
Автор

மிகவும் சிறப்பான விமர்சனம்.
இதேபோல் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லீம்கள் நாட்டுப்பற்று பற்றி ஒரு திரைப்படம் எடுக்க முயற்சிகள் எடுத்தால் மிகவும் சிறப்பு. படிக்க வேண்டும் என்றால் அன்றைய நாட்களில் மிகவும் சிரமமான காலம். ஆண்பிள்ளை அயல் நாடுகளுக்கு எப்படியாவது ஏற்றி விடுவது. தமிழகத்தில் ஆங்கில மொழியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்... சிறு பிராயத்தில் இருந்து ஆங்கில கல்வியை ஹராம் என்று ஊட்டி வளர்த்த மூதாதையர்கள்... ஆனால் இன்று முஸ்லீம்கள் என்றால்...
தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு புறக்கணிப்பு...?
இது போன்ற கதைகள் ஏராளம் இருக்கிறது...
என் வாழ்வில் நான் அனுபவித்த துயரங்கள் சொர்ப்பம் கிடையாது...

nabeeskhan
Автор

ப்ளூ சட்ட review பாத்திட்டு வரேன் உண்மையாக அவரே கலங்குறாரு..😮

sahayakitson
Автор

Ungal ennam melongattum.. genuine review ❤

vimalkanakaraj
Автор

உங்க விமர்சனத்திலயே அழ வைத்து விட்டீர்கள்...😭😭😭 படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்...🎉🎉🎉

rgfabs
Автор

பிரசாந்த் தம்பி மிக்க நன்றிங்க.நான் இதுவரை பார்த்த விமர்சனங்களிலேயே ஆகச் சிறந்த விமர்சனம் தங்களுடையது தான்.தங்களின் இந்த நியாயமான கவலை ஆதங்கம் அரவணைப்பு இது இது இதை மட்டும்தான் எங்களை போன்ற பிறரால்(யாரோ?)" கீழ்த்தட்டு கீழ்ஜாதி தாழ்ந்த சாதி ஒடுக்கப்பட்ட சாதி ஒதுக்கி வைக்கப்பட்ட சாதி என பிரித்து வைக்கப்பட்ட நாங்கள் மற்றவரிடம் எதிர்பார்க்கின்ற ஒன்று.
நிலவுக்குள் கால் வைக்குமளவு உயர்ந்துவிட்ட இந்த சமூகத்தில் (இந்தியாவில்) இன்னும் தேர்தல் தேர்தலுக்கு மட்டுமே‌ தங்களின் கால்களை எவ்வித தயக்கமும் இன்றி சேரிக்குள் வைப்பவர்கள் அதன் பிறகு????
இன்று இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் திரு.திருமா அவர்கள் திரு.ரஞ்சித் அவர்கள் திரு.கிருஷ்ணசாமி அவர்கள் திரு.அதியமான் அவர்கள் போன்ற அனைவரும் கல்வியால் பொருளாதாரத்தால் மற்றவர்களை போல் உயர்வடைந்திருந்தாலும் இவர்களை சாதி என்ற கட்டுக்குள் வைத்து மட்டும் பார்ப்பதற்கான காரணம் என்ன?
அப்படி என்றால் இதற்கான அளவுகோல் தான் என்ன? யார் இந்த அளவுகோலை நிர்ணயித்தார்கள்? அதை உடைத்து வெளியில் வந்தாலும் "இல்லையில்லை உனது தகுதி இதுதான் "என மீண்டு எழவே முடியாத இடத்திற்குள் தள்ளிவிடுவதேன்ங்க சார்?

pasumaigandhimathi
Автор

நீங்க குடுக்குற ரிவியூ இருந்தே தெரியுது அது எவ்வளவு நல்ல படம் ஒன்னு.... உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.... ஒரு நல்ல நேர்த்தியான விமர்சனம்...

ranjithnatarajan
Автор

தமிழ் படத்தின் வலிமையும் பெருமையும் பொன்னியின் செல்வனோ இந்தியன் 2 வோ அல்ல .... பருத்திவீரனும் வாழையும்தான் ...!!! 👏👏👏

muraliramaraj