Thanjavooru Mannu |#tamilvideo |#Porkaalam |#murali |#meena |#deva |#cheran

preview_player
Показать описание
Thanjavooru Mannu |#tamilvideo |#Porkaalam |#murali |#meena |#deva |#cheran

Directed by Cheran
Written by Cheran
Produced by
M. Kaja Mydeen
V. Gnanavelu
V. Jaya Prakash
Starring
Murali
Meena
Sanghavi
Vadivelu
Rajeshwari
Manivannan
Cinematography Priyan
Edited by K. Thanikachalam
Music by Deva
Distributed by Roja Combines
Release date
30 October 1997
Country India
Language Tamil
Рекомендации по теме
Комментарии
Автор

சிங்கப்பூர் பிரசிடெண்டுக்கு இந்த பாடல் மிகவும் பிடித்தமான ஒன்று. அவர் இறந்த பின்பு அவர் எழுதிய கடிதத்தில் இந்த பாடல் அவர் உடலின் முன்பாக ஒழிக்க வேண்டும் என்று பல நாட்டின் அதிபர்கள் முன்னிலையில் இந்த பாடல் சபையின் முன்னில் அவர் உடல் முன்னில் ஒலிக்கப்பட்டது

tamiltalksmedia
Автор

சிங்கப்பூர் அதிபர் ஒருவர் இறந்த போது அவருடைய இறுதி சடங்கில் ஒலித்த பாடல்

ShahulHameed-pkdb
Автор

இப்போது வரைக்கும் இந்த பாடலை கேட்டு ரசிபவர்களின் பட்டியலில் நானும் ஒருவன்.... என்ன மாறி பாட்டு.. 🤝 தேவா அய்யா, சேரன் 🔥🔥

kavimfd
Автор

1997 ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் மயிலாடுதுறை சுந்தரம் திரையரங்கில் பார்த்த முதல் திரைப்படம் வேளைக்கு வந்து பார்த்த முதல் திரைப்படம் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவு

SoundharSoundhar-vn
Автор

தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து-சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா
பதில் சொல்லம்மா
தந்தானே-தந்தானே-தந்தானக் குயிலே
சாமி தந்தானே-தந்தானே என்னோட மயிலே
தந்தானே-தந்தானே-தந்தானக் குயிலே
சாமி தந்தானே-தந்தானே என்னோட மயிலே
மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு
பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு
காது செஞ்ச மண்ணு அது மேலூரு
அவ உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு
கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க
நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி-சுத்தி வந்தேங்க
நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க
தந்தானே-தந்தானே-தந்தானக் குயிலே
சாமி தந்தானே-தந்தானே என்னோட மயிலே
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து-சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு
நான் தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு
அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு
காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு
ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு
பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு
பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு
என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு
தந்தானே-தந்தானே-தந்தானக் குயிலே
சாமி தந்தானே-தந்தானே என்னோட மயிலே
போடு தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து-சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா
பதில் சொல்லம்மா
தந்தானே-தந்தானே-தந்தானக் குயிலே
சாமி தந்தானே-தந்தானே என்னோட மயிலே
போடு

லோகநாதன்ரவிச்சந்திரன்
Автор

மீனாவின் நடிப்பு, முகபாவனை, நடனம் அருமை.. திறமையான நடிகை.. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் மீனா ❤️❤️❤️

champnero
Автор

2024 இல் இந்த பாடலை கெட்டவர்கள் like போடுங்க

agasteenblush
Автор

மீனா அழகு தேவதை ❤️😍என்றென்றும் கண்ணழகி மீனா ரசிகன் 😍😍😍😍😍

SakthiVel-kzsl
Автор

இந்த பாடல் எழுதும் போது நிஜம் உண்மையில் தெய்வம் அவரை ஆட்கொண்டு இருக்கும் ❤

balajib
Автор

ரஜினிகாந்த் சார்💥 இந்த பாட்டோட அருமையை சொன்ன பிறகு தான் தெரிந்தது💥

elancheran
Автор

தேனிசைத்தென்றல் தேவா அவர்களின் மயக்கும் இசையில், கிருஷ்ணராஜ் அவர்களின் மெல்லிய குரலில், புரட்சி நடிகன் முரளி அவர்களின் நடிப்பில் மீனா அவர்களின் அழகிய நடன அசைவில் ஒரு அருமையான பாடல். இன்றும் என் தினசரி பாடல் தொகுப்பில் ஒன்றாக உள்ளது

❤❤❤❤❤❤

mithusings
Автор

சிறு வயதில் கேட்டு ரசித்த பாடல், இப்போதும் ரசித்து கொண்டு இருக்கிறேன். இந்த மாதிரி இசை பாடல் இனிமேல் வராது.❤❤❤

Ravikumar-wies
Автор

அழகு தேவதை மீனாவுக்காகவே எழுதிய அருமையான பாடல் வரிகள் அருமை....
கண்களால் ரசிகர்களை கைது செய்த காந்த கண்ணழகி எங்கள் தங்க தலைவி மீனா 😍😍😍

sriramsamayaltamil
Автор

இந்தப் பாடலைப் பாடிய கிருஷ்ணராஜ் ஐயா சேலத்தை சேர்ந்தவர் என்பதில் மகிழ்ச்சியாய் இருக்கிறது இந்தப் பாடல் ஒவ்வொன்றும் மண்வாசனை வீசுகிறதா அவர் பாடியிருக்கிறார் இந்தப் பாடலை எழுதியவர் இசையமைத்தவர் நடித்தவர்கள் பாடியவர் என அனேக அடையாளங்களை கொண்டிருக்கிறது❤❤❤❤ மீண்டும் ஒரு முறை கிருஷ்ணராஜ் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் அவருடைய குரல் வளம் சூப்பர்❤

VijayS-zkfo
Автор

இந்த பாடல் வரிகளில் வரும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியும், பாஞ்சாலங்குறிச்சி மண்ணும் எங்கள் ஊர் என்பதில் பெருமையாக
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🎉🎉🎉🎉

gandhiselvanselvan
Автор

எனக்கு மிகவும் பிடித்த பாடல் முரளி நல்ல நடிகர்

maniarasu-ogej
Автор

ஒரு அழகான பெண்ணை இதற்கு மேல் வர்ணிக்க யாராலும் முடியாது.

kalyanamm
Автор

இன்றளவும் இதுபோன்ற பாடல்கள் இவ்வுலகில் காலத்தினால் அழியா பாடல்கள். நன்றி தேனி சைத் தென்றல் தேவா சார் 🙏🙏🙏சேரன் சார்🙏🙏🙏🙏

Vinothkumar-xboy
Автор

இந்த பாடலை முதன் முதலில் புகழுரில் கேட்டேன். 25வருடம் இருக்கும்

ayyappanayyappan
Автор

மீன்சுருட்டி நல்லையா தியேட்டர் நான் அக்கா அண்ணன் சிறுவயதில் இந்த படம் பார்க்க சென்று நெரிசலில் சிக்கி கலையில் 10 மணி காட்சி பார்க்க சென்று மதியம் மேட்னி 3மணி காட்சி பார்த்தோம் தாமதம் ஆனதும் எங்க அப்பா அண்ணன் தியேட்டர் வந்து விட்டார் குடும்பத்தோடு எங்க அப்பாவிடம் அடி வாங்கினோம் அப்போது எனக்கு வயது 10
இப்பொழுதும் இந்த பாடல் படம் தொலைக்காட்சி பெட்டியில் ஒலிக்கும் போது கண்களில் ஒரு கலக்கம்....

speedmanispeedmani