Mira Thiruchelvam - Vinner Tamil3s Tre Tamiler 2017

preview_player
Показать описание
நோர்வே தமிழ் 3 வானொலியினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் “தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருதுகள் இம்முறை மூன்று தமிழ் இளைஞர்களிற்கு வழங்கப்பட்டுள்ளன.தனது குழந்தைபருவத்திலேயே இசையில் ஈடுபாடுகாட்டி வந்திருக்கின்றார் மீரா திருசெல்வம். புல்லாங்குழல் இசையினை வழமையானதொரு மேடையில் இசைத்துக்காட்டி விட்டு திருப்திகொள்ளும் அணுகுமுறை இவரிடம் இருந்ததில்லை. மாறாக ஆழமான தேடலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கின்றார் இவர். தமிழ் பாரம்பரிய புல்லாங்குழல் இசையினை உரிய வடிவத்தில், கேட்பவர்களை மெய்மறக்கவைக்கும் வகையில் வழங்கி வந்திருக்கிறார் இவர். ஒரு இசைவடிவத்தினை எவ்வாறு ஏனைய வாத்தியங்களுடன் இணைத்துப் புதுமை பண்ணலாம் என்கின்ற ஆர்வத்துடன் செயற்பட்டுவந்திருக்கின்றார் இவர். தமிழ் பாரம்பரிய இசையினை மேற்கத்திய இசையுடன், குறிப்பாக நோர்வேஜிய இசைவிற்பனர்களுடன் இணைந்து வழங்குவதில் ஆழமான ஈடுபாடு காட்டியுள்ளார் இவர். குரளழைn எனப்பாடும் இசை இணைவு இவரின் ஒரு தவமாகவே இருந்துவந்துள்ளது. பேர்கன் நகரிலே வாழ்ந்துவரும் இந்த வெற்றியாளர் தனது சகோதரியுடனும் ஏனைய இரு நோர்வேஜியர்களுடனும் இணைந்து இசைக்குழு ஒன்றை அமைத்து புதுமைகள் பல படைத்துவருகின்றார். பன்னாட்டு இசை அமைப்பாளர்களுடன் இணைந்து பயணிக்கும் இவர் அவாவி நிற்பது ஒரு முற்போக்கு இசைவடிவத்தை. இசையென்பது ஒரு கட்டுக்குள் நிற்காமல் புதிய பல வடிவங்களை தேடிப் பிரவாகிக்கும் ஒரு நதி என்கிற ஆர்வத்துடன் ஒரு படைப்பாளியாக வளர்ந்துவருகின்றவர் இவர் Molecular Biology, நுண்மூல உயிரியலில் தனது உயர்கல்வியினைத் தொடர்ந்துவருகின்றார். விளையாட்டுத்துறையிலும் இயற்கையுடனும் ஈடுபாடான இவர், வலைபந்தாட்டத்திலும் நோர்வேஜிய தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கெடுத்துள்ளார். இசைத்துறையில் புதுமைகள் படைக்கும் மீரா திருசெல்வம் தமிழ்3 இன் தமிழர் மூவரில்' ஒருவராக மதிப்பளிக்கப்படுகிறார்.
Рекомендации по теме
Комментарии
Автор

WOW Mira so beautiful songs.
I'm oromo& follow you

AmanShumi
Автор

Mira Guutuu keenyaa! ati kan guutuuti guutuun kan keenya isin kan oromooti! si jaallanna ati humna guutuuti❤💚❤

Ayyuuth
Автор

hayii worraa komentii nama kofalchistuu dhugaa rabbii
Intaalii silaa afaa oromoo ni bektii worrii miraa tennaa sii jalalanaa jetanii?

rahiimaajalalatuum
Автор

Asi jaala idin takka hin jiru ijoole kenyaa maale bakuma huda argamatu akkamu tasisa

makya
visit shbcf.ru