Secret matters in Kama! #Shorts

preview_player
Показать описание
My favorite evergreen romantic melody, "Raja Raja Chozhan" from "Rettai Vaal Kuruvi," is here to entice you.

Happy weekend!

#Shorts #SecretMatters #AlexanderBabu

_________________________________

Follow Us On;

_________________________________

In Association with DIVO - Digital Partner
Рекомендации по теме
Комментарии
Автор

எதேர்ச்சையாக உங்களின் காணொளி காண நேர்ந்தது, பாடலுக்கு விளக்கம் 🙈 எம் தமிழ் மொழியில் மட்டுமே காம வரிகள் கூட காதலாக தோன்றும் ❤️

swethapavi
Автор

எத்தனையோ காம பாடல்கள் வந்தபோதிலும், இந்த பாடல் காம பாடலாக அறியப்படவில்லை.. அந்த அளவிற்கு அழகு தமிழில் இந்த பாட்டில் காமத்தை உள் அர்த்தமாக எழுதி உள்ளார் மு.மேத்தா ... அருமை கவிஞரே!!! வாழ்த்துக்கள்.. நன்றி அலெக்ஸ்.

tamilnews
Автор

நீங்க பாடும்போது இன்னும் இனிமையாக இருக்கு bro 👍👍👍👏👏

shanmugams
Автор

இந்த பாடலை ஆயிரம் முறைக்கு மேல் கேட்டு இருக்கிறேன். சலிப்பு தட்டவே இல்லை.
பாடலாசிரியர் மு.மேத்தாவிற்கு என் வாழ்த்துக்கள்.👍💐💐💐👍

V.V.KARTHIKEYAN
Автор

இவ்வளவு ஒரு மோசமான அர்த்தம் இந்தப் பாடல்களில் வரிகள் எவ்வளவு அழகா எழுதி இருக்காங்க கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கு ஆழமா யோசிக்கும் பொழுது தான் தெரிகிறது இந்தப் பாடலின் அர்த்தம் புரிகிறது 😊

anitharamesh
Автор

நீங்க பாடும்போது வாழ்க்கை ரசித்து வாழவேண்டியது என்பது புரிகிறது👌👍👏

AariAari-ojci
Автор

இந்த பாட்டை முழுவதும் பாடுங்கள் தலைவா, உங்கள் குரல் இனிமை

NaveenKumar-nzpq
Автор

ஆஹா. என்ன ஒரு அருமையான விளக்கம். ஐயா அலக்ஸ் அவர்களே. சிறந்த பாடல் தெளிவு

prasad
Автор

எத்தனையோ முறை இந்த பாடலை கேட்டு உள்ளேன் ஆனால் நீங்கள் சொல்லிய பிறகு தான் தெரிகிறது அதன் ஆழமான அர்த்தம் அருமை அருமை அருமை உங்கள் குரல் வளம் மிக மிக மிக இனிமை நன்றி சகோதரா👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏

deeshakitchen
Автор

இந்தப் பாடலை போலவே உங்களின் முக பாவனைகளும், அர்ப்பணிப்பும் அந்தந்த வரிகளில் அழகாக தெரிகிறது💐💐💐
(Cute expression)

yuvatubetamil
Автор

இந்த பாடல் நான் எத்தனையோ முறை கேட்டு ரசித்திருக்கிறேன் ஆனால் நீங்கள் சொல்லும் முன் வரைக்கும் இதன் அர்த்தம் எனக்கு புரிந்ததே இல்லை இதை நீங்கள் சொல்லி பாடும் போது ஒரு சிலிர்ப்பும் வெட்கமுமாக இருக்கிறது ஆனாலும் இதை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது நீங்கள் பாடும் விதம். அருமை👌

kalaivetri
Автор

இந்த பாடல் பல முறை கேட்டு ரசித்துள்ளேன். ஆனால் அதன் பொருள் நீங்கள் சொல்லும் போது தான் புரிந்தது அருமையான பாடல்.❤❤❤❤

raji
Автор

இந்த பாடலை நான் பலமுறை கேட்டதுண்டு ஆனாலும் அதை விட அருமை! நீங்கள் பாடியது!..

kumaran
Автор

மனிதனின் உணர்வுகள் எத்தனை அழகானது . நமக்குள் நடக்கும் உணர்வுகளை வெளியில் இருந்து ஒருவர் வடிவமைக்கும் போது எத்தனை அழகு!

arumugamthiyagarajan
Автор

பாட்டுக்கு இவ்வளவு அர்த்தம் யோசித்ததே இல்லை. இசையும், குரலும் மயக்கத்தில் ஆழ்த்தும். உள் அர்த்தம் தேவைப்பட்டதேயில்லை.

sasikalasridhar
Автор

நீங்கள் கொண்டுசேர்க்கும் அழகு பாராட்டுக்குறியது. வாழ்க பல்லாண்டுகாலம் இசை அறிவோடு நீங்களும்

anandv-fe
Автор

அண்ணா இந்த பாடல் முழுமையாக உங்கள் குரலில் கேட்கனும் . Vera level feel bro awesome .

KarthikViswalingam
Автор

அட கடவுளே... பிடித்த வரிகளுக்கு உள்ளர்த்தம் புரிகிறது..., பெண்ணாக கூட நான் முகம் சுளிக்கவில்லை, திரும்ப திரும்ப கேட்க அருமை....

pavishakti
Автор

நீங்கள் சொன்ன அந்த அந்தரங்கத்தை நான் கவனிக்குல நீங்க பாட ஆரம்பிச்சத்தும் மெய் சிலிர்த்து விட்டது அவ்வளவு அழகாக பாடுனீர்கள்

selvamaheskumaramangalam
Автор

இந்த பாடலை அதிகம்
கேட்டாலும் கேட்கும் பொழுது
எல்லாம் முதல்முறை கேட்பது
போல் உணர்வு
மிகவும் அருமையான பாடல்

ezhilarasir