Kadhaippoma Song (Lyrics) | Oh My Kadavule | Sid Sriram

preview_player
Показать описание
Kadhaippoma Song (Lyrics) | Oh My Kadavule | Sid Sriram

Hey Welcome All, I am Tune Isai. Welcome back to my channel. In this video, I added one more music lyrics "Kadhaippoma Song". Please use Headphones for a better experience.

Kadhaippoma Song
Kadhaippoma Song Lyrics

#KadhaippomaLyrics #OMKSong #TuneIsai #MusicLyrics

Credits to Original Song:
Oh My Kadavule - Kadhaippoma Lyric | Ashok Selvan, Ritika Singh | Leon James | Sid Sriram

The soul-stirring #Kadhaippoma from #OhMyKadavule! The #LeonJames musical sung by #SidSriram will sweep you off your feet in the very first listen!

Click play for the official Tamil lyric video now!

Produced by Axess Film Factory
Production house - Happy High Pictures
Produced by G.Dilli Babu
Co-Produced by Ashok Selvan & Abinaya Selvam
Written & Directed by Ashwath Marimuthu

Song - Kadhaippoma
Music - Leon James
Singers - Sid Sriram
Lyrics - Ko Sesha

⏩⏩ Lyrics ⏪⏪

Chorus : {Dhirana dhiranam dhirana
Dhirana dhiranam dhirana
Thananam thananam thananam thana
Tharinina thaa naaa naa} (2)
Thananam thananam thananam thana
Tharinina thaa naaa naa

Male : Hmm mmm mm mm mm
Naetru naan unnai paartha paarvai veru
Neengaadha ennam aaga aanaai indru
Unnodu naanum pona dhooram
Yaavum nenjilae
Reengaara ninaivugalaaga alaiyai
Ingae minjudhae
Noolarundha pattam polae
Unnai sutri naanum aada
Kaigal neeti neeyum pidikka kaathirukkiren

Male : Idharkellaam arthanagal enna
Kekka vendum unnai
Kaalam kai koodinal

Male : Kadhaippomaa kadhaippomaa
Kadhaippomaa
Ondraaga neeyum naanum dhaan
Kadhaippomaa kadhaippomaa
Kadhaippomaa
Nee pesa pesa kaayam aarumae

Male : Adhikaalai vandhaal
Azhagaai en vaanil nee
Anaiyaadha suriyan aagiraai
Nedu neram kaaindhu
Kadha kadhappu thandhavudan
Nilavaai urumaari nirkkiraai

Male : Unnai indru paarthadhum
Ennai naanae ketkkiren
Vairam ondrai kaiyil vaithu
Engae thaedi alainthaaiyo

Male : Unmai endru therinthumae
Nenjam solla thayangudhae
Kaigal korthu pesinaalae
Dhairiyangal thondrumae

Male : Kadhaippomaa kadhaippomaa
Kadhaippomaa Chorus : Kadhaippomaa
Male : Ondraaga neeyum naanum dhaan
Kadhaippomaa Chorus : Kadhaippomaa
Male : Kadhaippomaa Chorus : Kadhaippomaa
Male : Kadhaippomaa
Nee pesa pesa kaayam aarumae

Male : Kadhaippomaa Chorus : Kadhaippomaa
Male : Kadhaippomaa Chorus : Kadhaippomaa
Male : Kadhaippomaa

Chorus : {Dhirana dhiranam dhirana
Dhirana dhiranam dhirana
Thananam thananam thananam thana
Tharinina thaa naaa naa} (2)
Thananam thananam thananam thana
Tharinina thaa naaa naa

Male : Kadhaippomaa kadhaippomaa
Kadhaippomaa
Ondraaga neeyum naanum dhaan
Kadhaippomaa kadhaippomaa
Kadhaippomaa
Nee pesa pesa kaayam aarumae

Like...
Comment...
Subscribe...
Share...

For more music content Subscribe to Tune Isai.
Thanks for Watching.
Рекомендации по теме
Комментарии
Автор

2020-ம் ஆண்டு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், ரித்திகாசிங், வாணிபோஜன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர்களுடன் சிறப்புத் தோற்றத்தில் விஜய்சேதுபதி & கௌதம்மேனன் சகிதம் மற்றும் பலரது நடிப்பில் வெளியான படம்தான் "ஓ மை கடவுளே." இதுவொரு கற்பனை காதல் ரசம் கொண்ட நகைச்சுவை திரைப்படம்.
இப்படத்திற்கு இசை அமைத்த லியோன் ஜேம்ஸ், பாடலாசிரியர் கோ.சேஷா, இசையமைப்பாளர் & பாடகர் அனிருத் ஆகியோர்கள் பத்மா சேஷாத்ரி பள்ளித்தோழர்கள். நான்கு வயதில் பியானோ வாசிக்கத் தொடங்கிய லியோன் ஜேம்ஸ், பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையமைப்பில் உருவான "ஜிகிர்தாண்டா" உட்பட அவரது மூன்று திரைபடங்களில் கீபோர்ட் வாசித்துள்ளார். YouTube-ல் வெளியிட்ட "வாயா என் வீரா " பாடலை பார்த்து நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் தன்னுடைய காஞ்சனா-2 திரைபபடத்திற்கு இசையமைக்க லியோன் ஜேம்ஸிற்கு வாய்ப்பு கொடுத்தார் என்பதுதான் நிதர்சனம்!

"நூலறுந்த பட்டம் போல
உன்னை சுற்றி நானும் ஆட
கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்"

பாடலாசிரியர் கோ.சேஷா, ஜீவன் உள்ள தேன்தமிழ் வரிகள் மூலம் ஏமாற்றத்தின் வலியினை எவ்வளவு எளிமையாக புனைந்து விட்டார்... பாருங்களேன்!
சபாஷ்!
எதையோ இழந்து தவிப்பது போன்றதொரு பிரமை ஏற்படுத்துகிறது அல்லவா?
நிற்க...

நான் இந்த திரைபடத்தை விமர்சிக்க விரும்பவில்லை.
எனவே, பாடலிற்கு வருவோம்!
இப்பாடலை அருமையாகப் பாடி கேட்போரை பழைய நினைவலைக்குள் தள்ளி திக்குமுக்காட வைத்த சித் ஸ்ரீராமை பாராட்டாமல் இருப்பது ரசிகனுக்கு அழகல்ல.
பாராட்டுகள்!

யார் இந்த சித் ஸ்ரீராம்?

சித் ஸ்ரீராம் எனும் சித்தார்த்த ஸ்ரீராம் இந்தியா-அமெரிக்கா இசை தயாரிப்பாளர் ஆவார். இவர் சென்னை மையிலாப்பூரில் பிறந்து, தன்னுடைய ஒரு வயதில் பெற்றோர்களுடன் மேற்கு அமெரிக்கா-கலிபோர்னியாவில் குடியேறி அங்கேயே படித்து வளர்ந்தவர், கர்நாடக சங்கீத ஆசிரியையான தாய் லதா ஸ்ரீராமிடம் முறையாக சிறுவயது முதற்கொண்டு முழு ஈடுபாட்டுடன் சங்கீதத்தை உள்வாங்கி தேறினார். பரதநாட்டிய கலையையும் கற்றறிந்து தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளிக்கல்வி முடித்த கையோடு பெர்க்லீ இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை தயாரிப்பு மற்றும் பொறியியலில் பட்டம் பெற்றார்.
"கடல்" திரைப்படத்தில், AR.ரஹ்மான் இசையில் தன்னுடைய முதல் தமிழ் திரைபாடலை பாடி திரை உலகில் அடியெடுத்து வைத்தார். இசை தயாரிப்பாளரான (மணிரத்னத்தின் வானம் கொட்டட்டும்) இவர் பின்னணி பாடகராக, பாடலாசிரியராக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் திறமை காட்டி வருகிறார். பல வெற்றி பாடல்களை நேயர்களுக்கு விருந்தளித்ததின் மூலம் பல விருதுகள் அவரை தேடி வந்தது மட்டுமல்லாமல் பிரபலமான பாடகராக அவரது அந்தஸ்தை உயர செய்ததை மறுக்க முடியாதல்லவா?

இப்பாடலை பண்பலைகளில் நான் அடிக்கடி கேட்க நேர்ந்த பொழுதெல்லாம் பின்னூட்டம் வரைய வேண்டும் என்று எண்ணியதுண்டு!
ஆனால் என்ன செய்ய?
காலமும், நேரமும் இன்றுதான் கைகூடியது என்று சொன்னால் மிகையல்ல.
பாடலை திரும்பத் திரும்ப கேட்கும்போது எதையோ இழந்துவிட்டது போன்றதொரு சூழல் உருவானது எனக்கு மட்டும்தானா?
பயமறியா இளமைகால கனாக்களை ஒட்டு மொத்தமாக அள்ளி எடுத்து ஒவ்வொன்றாக பிரித்து ரசித்து பார்ப்பதில் தான் எத்தனை ஆனந்தம்? குதூகலம்!
திரும்ப கிடைக்காத நாட்கள் அனைத்தும் அள்ளிக் கொடுத்த ஆனந்தத்திற்கு ஈடு இணை உண்டா?
அந்த அசட்டு தைரியமும், கள்ளம் கபடமற்ற நட்பும் என்ன விலை கொடுத்தாலும் திரும்ப கிடைக்காதே!
முற்றிலும் எதிர்பாராமல் அரங்கேறிய அந்த ஒரு விரிசல் கடைசிவரைக்கும் சரிசெய்யாமல் போனதற்கு நானும் காரணமாகிவிட்டேனோ?
இல்லையென்று தான் பறிகொடுத்த உள்மனது ரீங்காரமிடுகிறது.
காலம்...வெச்சுசெஞ்ச சாபமோ?
புரியவில்லை எனக்கு!
கைகூடி வந்த நேரம் பார்த்து
ஊர்கூடி போனபோது விழிநீர் மல்க எனை பார்த்தும் பாராமல்...

எதுவும் சொல்லிமாளாதல்லவா?
இவ்வளவு சீக்கிரம் பாடல் முடியுமென்று நினைக்கவில்லை!
நான் எதையெதையோ நினைத்து பார்க்கையில் ஒரு முடிவும், விடிவும் தெரிவிக்காமல் கட்டு அவிழ்த்து விட்ட குதிரையாக நினைவுகள் யாவும் வெகுதூரம் ஓடிச்சென்றதை தடுத்து நிறுத்தத்தான் முடியுமா?

காதிற்கினிய அருமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.

PS-